Ranji Cricket Tamilnadu-Tripura Trouble Today starts today
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழகம் - திரிபுரா இடையிலான மோதும் ஆட்டம் சென்னையில் இன்று தொடங்கியது.
சென்னையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆந்திரத்துடன் சமன் செய்த தமிழக அணி, திரிபுராவுக்கு எதிராக வெற்றிப் பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது.
ஆந்திரத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் விரைவாக ஆட்டமிழந்தது. இருப்பினும் 2-வது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி தோல்வியிலிருந்து தப்பியது.
எனவே, திரிபுராவுக்கு, தமிழக அணி டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் முரளி விஜய், கெளஷிக் காந்தி, கேப்டன் அபிநவ் முகுந்த், துணை கேப்டன் இந்திரஜித், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர்.
அதேநேரத்தில், ஆந்திரத்துக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் அரை சதமும், 2-வது இன்னிங்ஸில் சதமும் விளாசிய அபராஜித், நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடும் இந்திய "ஏ' அணிக்கு தேர்வு செய்யப்பட்டுவிட்டதால், திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. இது தமிழக அணிக்கு பின்னடைவு தான்.
