வெறும் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிப்  பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே ஆன ஐபிஎல் 11-வது ஆட்டம் நேற்று பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி சார்பில் ரஹானே, ஆர்சி ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

ரஹானே 36 ஓட்டங்களிலும், ஆர்சி ஷார்ட் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் 92 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதில், பென்ஸ்டோக்ஸ் 27 ஓட்டங்கள், ஜோஸ் பட்லர் 23 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். ராகுல் திரிபாதி 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20-வது ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி மொத்தம் 217 ஓட்டங்களைக் குவித்தது. 

பெங்களூரு அணி தரப்பில் கிறிஸ்ட் வோக்ஸ், சகால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பெங்களூரு அணியின் மெக்கல்லம், டி காக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மெக்கல்லம் வெறும் 4 ஓட்டங்களுக்கு கெளதம் பந்தில் ஆட்டமிழந்தார். டி காக் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதில், 57 ஓட்டங்களை குவித்து கோலி ஆட்டமிழந்தார். பின்னர் ஆடிய டி வில்லியர்ஸ் 20 ஓட்டங்கள், பவன் நேகி 3 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 

சுந்தர் 35 ஓட்டங்களை போல்டானார். மந்தீப் சிங் 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார். 20-வது ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி 198 ஓட்டங்களை மட்டுமே குவித்தது. 

அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிப்  பெற்றது.