Asianet News TamilAsianet News Tamil

டிராவிட்டையே நம்பியிருந்த இளம் வீரர்களுக்கு ஆசிய கோப்பையில் அதிர்ச்சி

ஆசிய கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடர் இன்று தொடங்கியுள்ளது. 
 

rahul dravid miss the under 19 asia cup
Author
Bangladesh, First Published Sep 29, 2018, 11:44 AM IST

ஆசிய கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், இன்று 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடர் இன்று தொடங்கியுள்ளது. 

19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கான ஆசிய கோப்பை இன்று தொடங்கியுள்ளது. வங்கதேசத்தில் நடக்கும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, ஹாங்காங், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 அணிகளும் கலந்துகொண்டு ஆடுகின்றன. 

இதில் ஏ பிரிவில் இந்தியா, ஆஃப்கானிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும் பி பிரிவில் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடர் இன்று தொடங்கி அக்டோபர் 7ம் தேதி வரை நடக்கிறது. 

இந்த தொடரில் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டுக்கு பதிலாக டபிள்யூவி ராமன் பயிற்சியாளராக செயல்படுகிறார். 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணி மற்றும் இந்தியா ஏ அணி ஆகியவற்றின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். இந்தியா ஏ அணிக்கு கிரிக்கெட் தொடர்கள் இருக்கும்போது, ராகுல் டிராவிட் அந்த அணிக்கு பயிற்சியளிக்க சென்றுவிடுவார். அந்த சமயங்களில் டபிள்யூ வி ராமன் 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார். 

rahul dravid miss the under 19 asia cup

அந்த வகையில் ஆசிய கோப்பை தொடரில் டிராவிட்டுக்கு பதிலாக ராமன் பயிற்சியாளராக செயல்படுகிறார். இன்றைய முதல் போட்டியில் நேபாளம் அணியுடன் இந்திய அணி ஆடிவருகிறது. 

19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி:

தேவ்தத் படிக்கல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், பவன் ஷா(கேப்டன்),அனுஜ் ராவத், யாஷ் ரதோட், ஆயுஷ் பதோனி, நேஹால் வதேரா, சித்தார்த் தேசாய், ஹர்ஷ் தியாகி, யாடின் மங்வானி, மோஹித் ஜங்ரா, சமீர் சௌத்ரி, ராஜேஷ் மோஹாண்டி

Follow Us:
Download App:
  • android
  • ios