ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் லாபஸ்சாக்னேவின் கேட்ச்சை அருமையாக பிடித்தார் ரஹானே. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 622 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸை தவிர மற்ற வீரர்கள் பெரிதாக ஆடவில்லை. மார்கஸ் ஹாரிஸ் மட்டுமே 79 ரன்கள் அடித்தார். அவரும் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் இந்திய அணியின் சுழலில் சுருண்டனர். 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 

ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஹாரிஸை தவிர ஓரளவிற்கு நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடியவர் லாபஸ்சாக்னே. ஆனால் அவரும் 38 ரன்களில் வெளியேறினார். அவரது கேட்ச்சை அபாரமாக பிடித்தார் ரஹானே. ஷமி வீசிய பந்தை மிட் விக்கெட் திசையில் அடிக்க, அந்த பந்து மிகவும் கீழாக வேகமாக சென்றது. ஆனால் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் செய்த ரஹானே, தனது வலதுபுறத்தில் மிகவும் கீழாக வேகமாக வந்த அந்த பந்தை அபாரமாக கேட்ச் செய்தார். இந்திய அணியின் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான ரஹானே, அந்த கேட்ச்சை அருமையாக பிடித்தார். அந்த வீடியோ இதோ..