rahane appointed as captain for rajasthan royals

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித் நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறது. ராஜஸ்தான் அணிக்கு ஸ்மித் கேப்டனாக இருந்தார். தற்போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில், ஆஸ்திரேலிய கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித் விலகியுள்ளார். அவருக்கு வாழ்நாள் தடை விதிப்பது குறித்தும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

அதனால் ஒழுங்கீன நடவடிக்கையில் சிக்கி ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை இழந்த ஸ்மித்தை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே சூதாட்ட புகாரில் சிக்கி கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் அணி, இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தமுறை தான் களம் காண்கிறது. அப்படி இருக்கையில், ஸ்மித்தால் மீண்டும் பிரச்னை வேண்டாம் என கருதி ஸ்மித்தை நீக்கிவிட்டு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.