12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஓபனில் மீண்டும் பங்கேற்கவிருந்த ராப்ரீடோ, கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகி அவரது இரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஸ்பெயின் வீரர் டாமி ராப்ரீடோ காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக பிரிட்டனின் அல்ஜாஸ் பெடேன் பிரதான சுற்றில் களமிறங்குகிறார்.

முன்னதாக பெடேன் தகுதிச்சுற்றில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ராப்ரீடோ விலகியதால் நேரடியாக பிரதான சுற்றில் களமிறங்குகிறார் பெடேன்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஓபனில் மீண்டும் பங்கேற்கவிருந்த ராப்ரீடோ, கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகியது அவருடைய இரசிகர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக அமைந்துள்ளது.

சர்வதேச தரவரிசையில் 101-ஆவது இடத்தில் இருக்கும் பெடேன், 2015 சென்னை ஓபனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவர் ஆவார்.

தெற்காசியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெறவுள்ளது.