ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. முதல் போட்டியில் டிவில்லியர்ஸை ரன் அவுட்டாக்கியதும் பந்தை அவரது நெஞ்சின் அருகே லயன் வீசி சென்றது, மார்க்ரமை நோக்கி கத்தியது, வார்னர்-டி காக் சண்டை என போட்டியை கடந்த மோதல்கள் நடந்தன.

இது ஆரோக்கியமான விஷயமல்ல என்பதால், முன்னாள் வீரர்கள் பலர் இதுபோன்ற அணுகுமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வார்னரின் ஆக்ரோஷ மற்றும் அநாகரிக அணுகுமுறைக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பலே கண்டனம் தெரிவித்தார். வார்னரை ஊக்குவிக்கும் அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் பயிற்சியாளர் லீமெனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் சேப்பல் வலியுறுத்தினார்.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை சரித்தார்.

ஐசிசி விதிகளை மீறிய செயல்களில் ஈடுபட்டதற்காக ஏற்கனவே 2 டீமெரிட் புள்ளிகளை பெற்றுள்ளார் ரபாடா. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடியபோது, அந்த அணியின் கேப்டன் ஸ்மித்தின் விக்கெட்டை 52 ஒவரின் கடைசி பந்தில் கைப்பற்றினார் ரபாடா.

விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில், ஸ்மித்தை நோக்கி ஆக்ரோஷமாக, அவரை கடுப்பேற்றும் வகையில் கத்தினார். பதிலுக்கு ஏதோ சொல்லி சென்ற ஸ்மித், நடுவரிடம் புகார் கொடுத்துவிட்டு சென்றார்.

An aggressive send off to steven smith by kagiso rabada. #SAvAUS #SAvsAUS pic.twitter.com/F9gHKVGTOQ
— Alauddin Khilji (@AlauddinKhilj10) March 9, 2018

ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் போட்டியைவிட மோதல்களே அதிகமாக நடக்கின்றன. ஆஸ்திரேலியாவுக்கு வார்னர் என்றால், தென்னாப்பிரிக்காவிற்கு ரபாடா.