p.v.sindu get sub collector appointment order from chandra babu

சப்-கலெக்டர் ஆனார் பி.வி.சிந்து…. பேட்மிண்டன் சாதனையை பாராட்டி ஆந்திர அரசு கௌரவம்…

சாதனைகளை பாராட்டி இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு துணை கலெக்டர் பணி நியமன ஆணையை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வழங்கினார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்து நாட்டிற்கு பெருமை பெற்றுத் தந்தார்.

பி.வி.சிந்துவுக்கு ஆந்திர மாநில அரசு சார்பில் துணை கலெக்டர் பணி வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பி.வி.சிந்து தனது பெற்றோருடன் தலைமை செயலகத்துக்கு சென்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். அப்போது அவருக்கு துணை கலெக்டர் பணி நியமனத்துக்கான அரசு ஆணையை சந்திரபாபு நாயுடு வழங்கினார். 

அவர் 30 நாட்களில் பணியில் சேருமாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிந்து தற்போது பேட்மிண்டன் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவேன் என்றும் உலக போட்டிக்கு தயாராகி வருகிறேன் என்றும் தெரிவித்தார்.