P.V.cindu in semi final Indian open batminten

இந்தியன்ஓபன்பேட்மிண்டன்தொடரில்நடப்புசாம்பியனானஇந்தியவீராங்கனைபி.வி.சிந்துஸ்பெயின் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குமுன்னேறியுள்ளார்

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால் 10-21, 13-21 என்ற நேர் செட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பீவென் ஜாங்கிடம் வீழ்ந்தார்.

பந்தை அடிக்கடி வெளியே அடித்துவிட்டு தவறிழைத்ததால் சாய்னாவினால் 32 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் போய் விட்டது. பீவென் ஜாங்குக்கு எதிராக 4-வது முறையாக மோதிய சாய்னா அதில் சந்தித்த முதல் தோல்வி இது தான்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் நடப்பு சாம்பியன் பி.வி.சிந்து , ஸ்பெயினைச் சேர்ந்த பீட்ரிஸ் கோரலெஸ்சுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

54 நிமிடங்கள் நடந்த பரபரப்பான இந்த மோதலில் சிந்து 21-12, 19-21, 21-11 என்ற செட் கணக்கில் பீட்ரிசை தோற்கடித்து அரைஇறுதியை எட்டினார். அரைஇறுதியில் சிந்து, தாய்லாந்தைச் சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார்.

அவருக்கு எதிராக சிந்து இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி அதில் 4-ல் தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.