pv sindhu swiss open badminton:ஸ்விட்சர்லாந்தில் நடந்து வந்த ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ஸ்விட்சர்லாந்தில் நடந்து வந்த ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். 

பாசல் நகரில் இன்று நடந்த மகளிர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை பூசானன் ஆங்பாம்ருங்பானை வீழ்த்தி சிந்து கோப்பையைக் கைப்பற்றியுள்ளார். 

மகளிர் பிரிவில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை பூசானானை 21-16,21-8 ஆகிய நேர் செட்களில் வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இந்த ஆண்டு சீசனில் சிந்து கைப்பற்றும் 2-வது சாம்பியன் பட்டம் இதுவாகும். ஜனவரியில் சையத் மோடி சர்வதேச பாட்மிண்டன் போட்டியில் சிந்து கோப்பையை வென்றிருந்தார். 

தாய்லாந்து வீாரங்கனை பூசானானுடன் 17 முறை மோதியுள்ள சிந்து அதில் 16 முறை வென்றுள்ளார். ஒருமுறை மட்டுமே 2019ம் ஆண்டு ஹாங்காங் ஓபனில் மட்டும் சிந்துதோல்வி அடைந்துள்ளார்.

முதல் கேமில் இருவரும் சரிசமமாக மோதினர். 3-3,9-9 என்ற கேம் கணக்கில் சிந்துவுக்கு பூசானன் நெருக்கடி கொடுத்து ஆடினார். ஆனால் சிந்து இரு கேம்புள்ளிகள்எடுத்து 11-9 என்ற முன்னேறியவுடன் வழக்கமான ஆட்டத்துக்கு திரும்பி பூசானனை திணறடித்தார். இறுதியில் 21-16 என்று முதல்செட்டை சிந்து கைப்பற்றினார்

2-வது செட்டில் சிந்து தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி தாய்லாந்து வீராங்கனையை அடக்கினார். ஏறக்குறைய 9 புள்ளிகள் முன்னிலையோடு சிந்து முன்னேறினார். இறுதியாக சிந்து 21-8 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக 2-வது செட்டை வென்றார்