Hangzhou Asian Games: பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி: காலிறுதிப் போட்டியில் தோற்று தொடரிலிருந்து வெளியேறினார்!
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறினார்.
ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், இந்தியா தங்கம், வெள்ளி, வெண்கலம் என்று 81 பதக்கங்களை கைப்பற்றி 4ஆவது இடம் பிடித்தது. இந்த நிலையில், இன்று காலையில் நடந்த பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி விளையாடும் போட்டிகள் - முழு விவரம்
காலிறுதிப் போட்டியில் சீனாவின் ஹீ பிங்ஜியாவோவை எதிர்கொண்டார். இதில், ஆரம்பம் முதலே கோல் அடிக்கும் வாய்ப்புகளை இழந்த சிந்து 16-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறினார்.
World Cup 2023: உலகக் கோப்பை டிராபியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட கேப்டன்கள்!