ஐபிஎல் பிளேஆஃப் சுற்றில் பஞ்சாப் அணி 101 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூரு அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பஞ்சாப் வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் பெங்களூரு அணிக்கு 102 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஐபிஎல் போட்டியில் பிளேப் சுற்றுப்போட்டி இன்று தொடங்கியது. இன்று வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டியில் பங்கேற்க முடியும். அந்த வகையில் மொஹாலி நடைபெற்ற போட்டியில் டாஸ் தோற்று பேட்டிங் ஆரம்பித்த பஞ்சாப் அணி பவர் ப்ளேயில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கை ஓங்கியது. பெங்களூரு பந்துவீச்சாளர்களின் தாக்குதலுக்கு திணறிய பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 102 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.
பஞ்சாப் அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிரியாம்ஷ் ஆர்யா 7, பிரப்சிம்ரன் சிங் 18, ஜோஷ் இங்கிலிஸ் 4, ஷ்ரேயஸ் ஐயர் 4, நெஹால் வதேரா 8, சஷாங்க் சிங் 3, முஷீர் கான் 0, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 26 ரன்கள், ஹர்ப்ரீத் பிரார் 4 மற்றும் அஸ்மத்துல்லா ஒமர்சாய் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பெங்களூரு அணி சார்பில் பந்து வீச்சாளர்கள் யஷ் தயாள் 2, புவனேஷ்வர் குமார் 1, ரொமாரியோ ஷெப்பர்ட் 1, சுயஷ் சர்மா 3, ஜோஷ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியை நிலைகுலையச் செய்தனர்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் 35 முறை மோதியுள்ளன. இதில் பஞ்சாப் 18 முறையும் பெங்களூரு 17 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்திய ஐந்து போட்டிகளில் நான்கில் பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு பஞ்சாப் அணிக்கு எதிராக அதிகபட்சமாக 241 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் பெங்களூரு அணிக்கு எதிராக அதிகபட்சமாக 232 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிராக பெங்களூரு குறைந்தபட்சமாக 84 ரன்களும், பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் குறைந்தபட்சமாக 88 ரன்களும் எடுத்துள்ளது.
