புனே சிட்டி வீரர் இராவணனுக்கு இரு ஆட்டங்களில் விளையாட தடையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெற்ற புனே - சென்னை இடையிலான ஆட்டத்தின்போது சென்னை அணியின் ஸ்டிரைக்கர் டுடுவின் காலில் மிதித்துள்ளார் இராவணன்.
ஆனால் போட்டியின்போது அவர் செய்த தவறை நடுவர்கள் கவனிக்கவில்லை. ஆனால் அது தொடர்பான விடியோ ஆதாரம் கிடைத்ததைத் தொடர்ந்து அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இராவணன் இரு ஆட்டங்களில் விளையாட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் ரூ.40 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அதனால் வியாழக்கிழமை நடைபெற்ற கோவா - புனே இடையிலான ஆட்டத்தில் இராவணன் பங்கேற்கவில்லை.
வரும் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்திலும் இராவணன் விளையாட முடியாது.
