pujara progress in ICC Batsman rankings Is there any place now?
ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சேதேஸ்வர் புஜாரா மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் சேதேஸ்வர் புஜாரா ஓரிடம் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். மொத்தம் 54 டெஸ்ட் போட்டிகளில், 52 ஓட்டங்களை சராசரியாக வைத்துள்ள புஜாரா, 873 புள்ளிகளுடன் தற்போதைய இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
பட்டியலின் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 945 புள்ளிகளுடன் நீடிக்கிறார்.
இங்கிலாந்தின் டேவிட் மலான் 47 இடங்கள் முன்னேறி 52-வது இடத்திற்கு முதல் முறையாகவும், ஜானி பேர்ஸ்டோவ் ஓரிடம் முன்னேறி 15-வது இடத்திற்கும் வந்துள்ளனர்.
அதேபோல, ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் 44 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 65-வது இடத்தையும், உஸ்மான் கவாஜா 2 இடங்கள் முன்னேறி 19-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான வரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்தையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது இடத்தையும் பிடித்து நீடிக்கின்றனர்.
இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆன்டர்சன் ஓரிடம் முன்னேறி முதலிடத்திலும், கிரெய்க் ஓவர்டன் 7 இடங்கள் முன்னேற்றம் கண்டு 89-வது இடத்திலும் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸில்வுட் ஓரிடம் முன்னேற்றம் கண்டு 5-வது இடத்துக்கும், பேட் கம்மின்ஸ் 4 இடங்கள் முன்னேறி 39-வது இடத்துக்கும் வந்துள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் ஜடேஜா இரண்டாவது இடத்திலும், அஸ்வின் 4-வது இடத்திலும் உள்ளனர்.
