Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் வெற்றிக்கும் எங்கள் தோல்விக்கும் இடையே இது ஒண்ணுதான் வித்தியாசம்!! ஆஸ்திரேலிய கேப்டன் அதிரடி

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாவிட்டாலும் கூட, ஆஸ்திரேலிய அணி கடைசி வரை உறுதியுடன் போராடியது. குறிப்பாக பின்வரிசை வீரர்களான கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட் ஆகியோர் பேட்டிங் ஆடிய விதம் அபாரமானது. 
 
pujara innings is the difference between both sides in first test said australian captain tim paine
Author
Australia, First Published Dec 10, 2018, 2:42 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆட்டங்களுக்கு இடையேயான ஒரே வித்தியாசம் புஜாரா தான் என்று ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாவிட்டாலும் கூட, ஆஸ்திரேலிய அணி கடைசி வரை உறுதியுடன் போராடியது. குறிப்பாக பின்வரிசை வீரர்களான கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட் ஆகியோர் பேட்டிங் ஆடிய விதம் அபாரமானது. 

எனினும் ஆஸ்திரேலிய அணியின் போராட்த்தை கண்டு மனம் தளராத இந்திய பவுலர்கள், கடைசி வரை உறுதியுடன் பந்துவீசி அந்த அணியை ஆல் அவுட் செய்து இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். 

pujara innings is the difference between both sides in first test said australian captain tim paine

போட்டி முடிந்ததும் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், எங்கள் அணியின் பின்வரிசை வீரர்கள் கடைசி வரை போராடியது பெருமையாக இருக்கிறது. இந்திய அணி இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள். நாங்கள் வெற்றி பெற்றிருக்கலாம் என்பதில் மாற்று கருத்து இல்லை. எனினும் நானும் ஷான் மார்ஷும் டிராவிஸ் ஹெட்டும் பெரிய இன்னிங்ஸை ஆடியிருக்க வேண்டும். இந்திய அணியில் புஜாரா ஆடியதை போன்ற இன்னிங்ஸை நாங்கள் ஆடவில்லை. இந்த போட்டியில் புஜாராவின் பேட்டிங் மட்டும்தான் இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் வித்தியாசமாக அமைந்தது. போட்டியின் முடிவை தீர்மானித்தது அவரது இன்னிங்ஸ்தான் என்று டிம் பெய்ன் தெரிவித்தார். 

pujara innings is the difference between both sides in first test said australian captain tim paine

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்த நிலையில், மறுமுனையில் நிதானமாக ஆடி சதமடித்து அணியை மீட்டெடுத்தார் புஜாரா. புஜாராவின் சதத்தால்தான் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்களை சேர்த்தது. அதேபோல இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடி 71 ரன்களை குவித்தார். எனவே ஆஸ்திரேலிய கேப்டன் கூறியதை போலவே புஜாராவின் பேட்டிங்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

Follow Us:
Download App:
  • android
  • ios