Pro Kabaddi Pune has taken the turn to Gujarat.

புரோ கபடி சீசன் – 5 போட்டியின் 122-வது ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி 44-20 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பால்டான் அணியை வீழ்த்தியது.

புரோ கபடி சீசன் – 5 போட்டியின் 122-வது ஆட்டம் புனேவில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் குஜராத் தரப்பில் ரைடர் சுகேஷ் ஹெக்டே 15 புள்ளிகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதனால் குஜராத் அணி 14-வது வெற்றியைப் பெற தகுதி பெற்றது. இதன்மூலம் ‘ஏ’ பிரிவில் 82 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இதேபிரிவில் புனேரி பால்டான் 63 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. 

இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

விளிம்பு நிலையில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி, தொடர் வெற்றிகளை குவித்தால் மட்டுமே அடுத்த அடுத்த ஆட்டங்களில் முன்னேற முடியும்.