புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டிகளில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி தமிழ் தலைவாஸும், குஜராத் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸும் வெற்றி பெற்றன.
புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் 41 போட்டிகள் பெங்களூருவில் நடந்த நிலையில், அடுத்த போட்டிகள் புனேவில் நடந்துவருகின்றன.
இன்று நடந்த முதல் போட்டியில் குஜராத் ஜெயிண்ட்ஸும் பெங்கால் வாரியர்ஸும் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் கடுமையாக போட்டியிட்டன. இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடி புள்ளிகளை பெற்றன. கடைசியில் 45- 40 என்ற கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2023: சிஎஸ்கே அணி கழட்டிவிடும் 2 வீரர்கள் இவர்கள் தான்..!
மற்றொரு போட்டியில் தமிழ் தலைவாஸும் தெலுங்கு டைட்டன்ஸும் மோதின. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 39-31 என தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த தமிழ் தலைவாஸ் அணி, பிற்பாதியில் வெற்றிகளை பெற்றுவருகிறது. ஜெய்ப்பூர், டெல்லி அணிகளை வீழ்த்திய தமிழ் தலைவாஸ் அணி இன்று தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தியது.
புள்ளி பட்டியலில் புனேரி பல்தான் முதலிடத்திலும், பெங்களூரு புல்ஸ்2ம் இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் 3 மற்றும் 4ம் இடங்களிலும் உள்ளன.
