Asianet News TamilAsianet News Tamil

Pro Kabaddi League: பட்டைய கிளப்பும் தமிழ் தலைவாஸ்.. குஜராத் ஜெயிண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றி

புரோ கபடி லீக் தொடரில் குஜராத் ஜெயிண்ட்ஸை 42-39 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று, வெற்றி பயணத்தை தொடர்கிறது தமிழ் தலைவாஸ் அணி.
 

pro kabaddi league 2022 tamil thalaivas beat gujarat giants
Author
First Published Nov 27, 2022, 11:15 PM IST

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் தொடக்கத்தில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்ற டபாங் டெல்லி அணி, அதன்பின்னர் தொடர் தோல்விகளை தழுவி கடும் சரிவை சந்தித்தது. அதேவேளையில், தொடக்கத்தில் தொடர் தோல்விகளை தழுவிய தமிழ் தலைவாஸ் அணி, அதன்பின்னர் டபாங் டெல்லி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் ஆகிய வலுவான அணிகளை எல்லாம் வீழ்த்தி வெற்றி பயணத்தை தொடங்கியது. 

இந்தியா பாகிஸ்தானுக்கு வரலைனா, நாங்களும் இந்தியா வரமாட்டோம்! ரமீஸ் ராஜாவின் கருத்துக்கு கம்பீரின் ரியாக்ஷன்

மீண்டும் இடையில் ஒன்றிரண்டு தோல்விகளை தழுவிய தமிழ் தலைவாஸ், மறுபடியும் தோல்வியிலிருந்து வெகுண்டெழுந்து வெற்றிகளை பெற்றுவருகிறது. இன்று குஜராத் ஜெயிண்ட்ஸை எதிர்கொண்டது தமிழ் தலைவாஸ் அணி. மிக பரபரப்பான இந்த போட்டியில் இரு அணிகளும் ஓரளவிற்கு சமமாக புள்ளிகளை பெற்றுவந்தன. கடைசியில் 42-39 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸும் டபாங் டெல்லியும் மோதின. இரு அணிகளும் வெறித்தனமாக விளையாடிய இந்த போட்டியில் 52-49 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.

FIFA World Cup 2022: உலக கோப்பையில் மாரடோனாவின் சாதனையை சமன் செய்த லியோனல் மெஸ்ஸி

புள்ளி பட்டியலில் புனேரி பல்தான் அணி முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு புல்ஸ் 2ம் இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் 3ம் இடத்திலும், யுபி யோதாஸ் 4ம் இடத்திலும் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 5ம் இடத்தில் உள்ளது. இந்த சீசனின் தொடக்கத்தில் கடைசியிலிருந்து 2 அல்லது 3ம் இடங்களில் இருந்துவந்த தமிழ் தலைவாஸ் அணி, தொடர் வெற்றிகளால் புள்ளி பட்டியலில் 5ம் இடத்தில் வலுவாக உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios