Pro Kabaddi Jeyapur defeated the team to reach 8th win
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 121-வது ஆட்டத்தில் யு.பி.யோதா அணி 53-32 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 121-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் யு.பி.யோதா வீரர் ரிஷாங்க் 28 புள்ளிகளைக் கைப்பற்றி வரலாறு படைத்தார்.
ரிஷாங்க்கின் அபார ஆட்டத்தால் யு.பி.யோதா அணி அணி 8-வது வெற்றியைப் பெற்று அசத்தியது.
தற்போதைய நிலையில் யு.பி.யோதா அணி "ஏ' பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன்மூலம் அந்த அணி ஏறக்குறைய சூப்பர் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.
ஜெய்ப்பூர் அணிக்கு இது 8-வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
