Pro Kabaddi Bangalore bulls defeated Up yodha
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 126-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 38-32 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியை வீழ்த்தியது.
புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 126-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் – யு.பி.யோதா அணிகள் இடையே நேற்று நடைப்பெற்றது.
புனேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு தரப்பில் கேப்டன் ரோஹித் குமார் 13 புள்ளிகளைப் பெற்றார். அதேபோன்று மகேந்திர சிங் 10 புள்ளிகளை கைப்பற்றி பெங்களூரு அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
ஆட்டத்தின் இறுதியில் பெங்களூரு புல்ஸ் அணி 38-32 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின்மூலம் பெங்களூரு அணி 7-வது வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும், 49 புள்ளிகளுடன் "பி' பிரிவில் 5-வது இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
