prithvi shaw shared youngest ipl fifty pride with samson

டெல்லி வீரர் பிரித்வி ஷா, ஐபிஎல் போட்டியில் அரைசதம் கடந்த இளம் வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சனுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையை அண்மையில் வென்ற இந்திய கேப்டன் பிரித்வி ஷா, டெல்லி அணிக்காக ஆடிவருகிறார்.

முதல் 5 போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய பிரித்வி ஷா, 10 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அவுட்டானார்.

வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் நேற்று கொல்கத்தாவை டெல்லி அணி எதிர்கொண்டது. அந்த போட்டியில் சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா, ஐபிஎல் போட்டிகளில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் அரைசதம் கடந்த இளம் வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சனுடன் பிரித்வி பகிர்ந்து கொண்டுள்ளார்.

அரைசதம் அடித்த நேற்றைய தினம், பிரித்வி ஷாவிற்கு 18 வயது முடிந்து 169 நாட்கள் ஆனது. 2013ல் சஞ்சு சாம்சன், ஐபிஎல்லில் தனது முதல் அரைசதத்தை அடிக்கும்போது இதே வயதுதான்.