Premji Lal Memorial Tennis Ramkumar Ramanathan - Shirom Balaji in finals

பிரேம்ஜித் லால் நினைவு டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ராம்குமார் ராமநாதன் மற்றும் ஸ்ரீராம் பாலாஜி இன்று மோதுகின்றனர்.

பிரேம்ஜித் லால் நினைவு டென்னிஸ் போட்டி மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் பிரேம்ஜித் லாலின் நினைவாக இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ராம்குமார் ராமநாதன் மற்றும் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் மோதுகின்றனர்.

நேற்று நடைபெற்ற அரையிறுதியில், 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில், பிரசாந்த் விஜய் சுந்தரை வீழ்த்தினார் ராம்குமார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், 6-4, 7-5 என்ற செட் கணக்கில், சாகேத் மைனேனியை வீழ்த்தினார் ஸ்ரீராம் பாலாஜி.

போட்டித் தரவரிசையில் ராம்குமாரும், ஸ்ரீராம் பாலாஜியும் இன்று இறுதிப் போட்டியில் மோத உள்ளனர்.