மாநில மற்றும் தேசிய  அளவிலான தடகள போட்டிகளில், வீராங்கனைகள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு வீராங்கனைகள் மென் மேலும் சாதனை படைத்து வருவதால் அவர்களுக்கு நாடு முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் 47 தங்கம் உட்பட143 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். அதிகாலை முதல் தீவிர பயிற்சி, நொடிப்பொழுதும் குறையாத அளவிற்கு மைதானத்தில் தீவிர பயிற்சி, வார்ம் அப், உடற்பயிற்சி என அனைத்திலும் ஒரு கலக்கல் தான்.

இன்னும் சொல்லப்போனால் தனியார் பயிற்சி மையத்திற்கு இணையாக, தங்களை அனைத்திலும் சிறப்பாக மாற்றிக்கொள்கின்றனர் இங்கு பயிற்சி எடுக்கும் வீராங்கனைகள்.இவர்களின் எண்ணமே, ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொண்டு தங்க பதக்கம் வென்று, இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே ..

ஏற்கனவே, நடைப்பெற்ற தென்னிந்திய அளவிலான விளையாட்டு போட்டியிலும், மாவட்டம், மாநில அளவிலான போட்டியிலும் இங்கு  பயிற்சி பெற்ற பல்வேறு வீராங்கனைகள் பதக்கம் வென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் காமன் வெல்த், ஒலிம்பிக்  போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை படைக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளனர் பெரம்பலூர் மாவட்டத்தில் பயிற்சி பெற்று வரும் வீராங்கனைகள்.