parthiv patel got chance to play in second test against south africa
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பார்திவ் படேலுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய தொடர்களில் விளையாடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.
கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில், இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக தங்களது பங்களிப்பை அளித்தனர். ஆனால், பேட்ஸ்மேன்களின் சொதப்பலால், தோல்வியடைந்தோம். இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 400 ரன்களைக் கூட இந்திய அணி எடுக்கவில்லை. 208 என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல், 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சோபிக்க தவறிய ஷிகர் தவன் மற்றும் விக்கெட் கீப்பர் சஹா ஆகிய இருவருக்கும் இந்த போட்டியில் இடமளிக்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக லோகேஷ் ராகுலும் விக்கெட் கீப்பர் பார்திவ் படேலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் பார்திவ் படேல் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
அதேபோல, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷாந்த் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் இந்த முயற்சி பலனளிக்குமா என்பதை ஆட்டத்தின் முடிவில் தான் அறிய வேண்டும்.
