வில்வித்தை: பாரிஸ் ஒலிம்பிக் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி! ரேங்கிங் சுற்றில் 4வது இடம்!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை தரவரிசை சுற்றில் இந்திய வில்வித்தை வீராங்கனைகள் 4வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான வில்வித்தை தரவரிசை சுற்றில் இந்திய வில்வித்தை வீராங்கனைகள் 4வது இடத்தைப் பிடித்துள்ளனர். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் நேரடியாக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
அங்கிதா பகத், பஜன் கவுர் மற்றும் தீபிகா குமாரி அடங்கிய இந்திய வில்வித்தை அணி ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் காலிறுதிச் சுற்றில் கொரிய அணியை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.
தரவரிசை சுற்றில் சிறப்பாகச் செயல்பட்ட அங்கிதா பகத் இந்த சீசனில் தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி 11வது இடத்தைப் பிடித்துள்ளார். அங்கிதா பகத் 9 முறை சரியாகக் குறிபார்த்து அம்பு எய்திருக்கிறார். பஜன் கவுர் மற்றும் தீபிகா குமார் இருவரும் 6 முறை துல்லியமாக இலக்கைத் தாக்கியுள்ளனர்.
பலம் வாய்ந்த கொரிய அணி தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ரேங்கிங்கில் அந்த அணியின் ஸ்கோர் 2046. சீனா (1996), மெக்சிகோ (1986) இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
Paris Olympics 2024: பாரிஸ் வந்து இறங்கிய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பிடி உஷா!