பாரா ஷூட்டிங் உலக கோப்பையில் இந்தியாவிற்கு மனீஷ் நார்வால் - ருபினா ஃப்ரான்சிஸ் ஜோடி தங்கம் வென்று கொடுத்துள்ளது.
ஜெர்மனியின் முனிச் நகரில் பாரா துப்பாக்கிச்சுடுதல் உலக கோப்பை தொடர் நடந்தது. இந்த உலக கோப்பையில் 10மீ ஏர் பிஸ்டல் மகளிர் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் நிஷா கன்வார் வெண்கல பதக்கம் வென்றார்.
பி6 - 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மனிஷ் நார்வால் - ருபினா ஃப்ரான்சிஸ் இணை, ஈராக்கின் மூசா அலி - சாரா அல் ஷப்பானி ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.
இதையும் படிங்க - உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 90மீ தூரம் கண்டிப்பா எறிவேன்..! இந்திய ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா சபதம்
நல்ல ஃபார்மில் இருந்த இந்தியாவின் மனிஷ் நார்வால் 90.3 புள்ளிகளையும், ருபினா ஃப்ரான்சிஸ் 83.7 புள்ளிகளையும் பெற, இந்தியாவின் மனிஷ் - ருபினா ஜோடி 170 புள்ளிகளை பெற்றது. ஈராக்கின் மூசா - சாரா ஜோடி 166 புள்ளிகளை பெற்று தோற்றது.
இதையும் படிங்க - WI vs IND: இந்தியாவை வீழ்த்தணும்னா அவர் வேணும்.. ஆல்ரவுண்டரை மீண்டும் ODI அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்
170 புள்ளிகளை பெற்று ஃபைனலில் வெற்றி பெற்ற இந்தியாவின் கலப்பு இரட்டையர் ஜோடி மனிஷ் நார்வால் - ருபினா ஃப்ரான்சிஸ் பாரா ஷூட்டிங் உலக கோப்பையில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்தனர்.
