உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 90மீ தூரம் ஈட்டி எறிய வேண்டும் என்று இந்திய ஈட்டி எறிதல் சாம்பியன் நீரஜ் சோப்ரா புதிய இலக்கை நிர்ணயித்துள்ளார்.
அமெரிக்காவின் ஒரேகானில் நடந்துவரும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிலிருந்து நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 22 தடகள வீரர்கள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.
ஒலிம்பிக்கில் இந்தியாவின் தங்க கனவை நனவாக்கிய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர் ஆகியோர் இந்தியாவின் பதக்க கனவை நனவாக்கும் வீரர்களாக பார்க்கப்படுகின்றனர்.
இதையும் படிங்க - WI vs IND: இந்தியாவை வீழ்த்தணும்னா அவர் வேணும்.. ஆல்ரவுண்டரை மீண்டும் ODI அணியில் சேர்த்த வெஸ்ட் இண்டீஸ்
நீளம் தாண்டுதலில் ஸ்ரீசங்கர் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீளம் தாண்டுதலில் ஃபைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ஸ்ரீசங்கர்.
ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ராவின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதலில் தங்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா, ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக்கில் அண்மையில் 89.94மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்து சாதனை படைத்தார்.
இதையும் படிங்க - நான் இன்றைக்கு ஒரு ஆளா இருக்கேன்னா அதுக்கு ரோஹித் தான் காரணம்..! சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி
இந்நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 90மீ தூரம் ஈட்டி எறியவேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளார். இதுகுறித்து பேசிய நீரஜ் சோப்ரா, ஜெயித்தாலும் தோற்றாலும் மறுநாள் வழக்கம்போல பயிற்சியும் பணியும் செய்ய தயாராகிவிட வேண்டும் என்று படித்திருக்கிறேன். எனவே அதுதான் முக்கியம் என்பதை நம்புபவன் நான். இலட்சியத்தை நோக்கி உழைத்துக்கொண்டிருக்கும்போது வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்பட தேவையில்லை. எனக்கு போட்டி நான் தான். நான் இப்போது இருப்பதைவிட நாளை வளரவேண்டும் என்பதே என் எண்ணம். 90மீ நெருங்கிவிட்டேன். 89.94மீ வரை வீசிவிட்டேன். இன்னும் 6 செமீ மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த ஆண்டு 90மீ என்ற மைல்கல்லை எட்ட வேண்டும் என்பதே என் இலக்கு என்று நீரஜ் சோப்ரா தெரிவித்தார்.
