Pakistani Himalayan warrior Take 10 thousand runs and achieve history ...
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த முதல் பாகிஸ்தானியர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்து இமயமலையாய் உயர்ந்து நிற்கிறார் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் யூனிஸ்கான்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்று வருகிறது.
இதில், 23 ஓட்டங்கள் எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த பெருமையை பெற்றார் யூனிஸ் கான்.
யூனிஸ்கான் (39) தனது 116-ஆவது டெஸ்டில் 10 ஆயிரம் ஓட்டங்கள் என்ற இமாலய உயரத்தை எட்டியிருக்கிறார். இதில் 34 சதமும், 33 அரை சதமும் அடங்கும்.
இதுகுறித்து யூனிஸ் கான் கூறியது:
“மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என நினைத்தேன். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்கள் குவிக்க வேண்டும் என்ற உந்துதலின் காரணமாக ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டு இப்போது வரை விளையாடிக் கொண்டிருக்கிறேன்' என்றார்.
யூனிஸ்கான், இந்த டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறுவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
