ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி சிறந்த தொடக்கத்தை அமைத்துள்ளது. முதல் விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறிவருகிறது. 

ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆடுகின்றன. 

இதில் முதல் டெஸ்ட் போட்டி துபாயில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்களாக முகமது ஹஃபீஸ் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் நிதானமாக ஆடி ரன்களை குவித்து வருகின்றனர்.

50 ஓவர்களுக்கும் மேலாக முதல் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் இருவருமே அரைசதம் கடந்து அபாரமாக ஆடிவருகின்றனர். முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறிவருகிறது. பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 150 ரன்களுக்கும் மேல் எடுத்து ஆடிவருகிறது.