Pakistan to suppress the expression of capturing metivukalai karcittatu
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் மே.தீவுகளை துவம்சம் செய்து வீழ்த்தி தொடரைக் கைப்ற்றி கர்சித்தது பாகிஸ்தான்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத் தீவுகளின் கயானா நகரில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 233 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 71 ஓட்டங்களும், ஜேசன் முகமது 59 ஓட்டங்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர், ஜுனைத் கான், ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களான கம்ரான் அக்மல் ரன் ஏதுமின்றி அவுட்டானார். பின்னர் வந்த அஹமது ஷெஸாத் 3 ஓட்டங்களிலும் நடையைக் கட்டினார். பின்னர் வந்த பாபர் ஆஸம் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இப்படி சரிவில் தான் தனது ஆட்டத்தைத் தொடங்கியது பாகிஸ்தான். 8.4 ஓவர்களில் வெறும் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்
இதனையடுத்து முகமது ஹபீஸுடன் இணைந்தார் ஷோயிப் மாலிக். அசத்தலாக ஆடிய இந்த இணை, பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்டு 29.5 ஓவர்களில் 149 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது முகமது ஹபீஸின் விக்கெட்டை இழந்தது. 86 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் எடுத்தார். இந்த இணை 4-ஆவது விக்கெட்டுக்கு 113 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷோயிப் மாலிக் 68 பந்துகளில் அரை சதத்தையும், தொடர்ந்து சிறப்பாக ஆடி 111 பந்துகளில் தனது 9-ஆவது சதத்தைப் பதிவு செய்தார். அதனால் பாகிஸ்தான் 43.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை தட்டிச் சென்றது.
ஷோயிப் மாலிக் 101, சர்ஃப்ராஸ் அஹமது 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷெனான் காபிரியேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
ஆட்டநாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளையும் ஷோயிப் மாலிக் தட்டிச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கர்சித்தது.
