Pakistan picked up England to win ... What kind of game ...

இங்கிலாந்தை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முன்னிலைப் பெற்றது பாகிஸ்தான் அணி. 

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலண்டன் லார்ட்சில் கடந்த 24–ஆம் தேதி தொடங்கியது. 

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 184 ஓட்டங்களும், பாகிஸ்தான் 363 ஓட்டங்களும் எடுத்தன. அதன்படி, 179 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 3–வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 235 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில், 4–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி மேற்கொண்டு 7 ஓட்டங்கள் எடுப்பதற்குள் எஞ்சிய 4 விக்கெட்டுகளை இழந்தது. மேலும், 242 ஓட்டங்களுக்கு ஆல்–ஔட் ஆனது. ஜோஸ் பட்லர் 67 ஓட்டங்களும், டோமினிக் பெஸ் 57 ஓட்டங்களும் எடுத்தனர். 

பாகிஸ்தான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது அமிர், முகமது அப்பாஸ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் மூலம் இங்கிலாந்து நிர்ணயித்த 64 ஓட்டங்கள் இலக்கை பாகிஸ்தான் அணி 12.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. 

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டி லீட்சில் வருகிற 1–ஆம் தேதி தொடங்கும்.