Operating buses in the semi-marathon route in Delhi

டெல்லியில் வரும் 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் அரை மாரத்தான் போட்டியின்போது, காற்று மாசு பிரச்சனையால் பங்கேற்பாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியின் காற்றுத் தரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இந்த நிலையில், அங்கு நடைபெற இருக்கும் அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அது தொடர்பாக, போட்டி ஏற்பாட்டாளர்கள் நேற்று கூறியது:

“அரை மாரத்தான் போட்டி நடைபெறும் நாளில், போட்டி வழித்தடம் முழுவதுமாக காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் உப்பு கலக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தெளிக்கப்படும். அத்துடன், அந்த வழித்தடத்தில் வாகனங்கள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.