ஹிட்மேன் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரான 264 ரன்களை குவித்த தினம் இன்று.

ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை விளாசிய ஒரே வீரர் ரோஹித் சர்மா தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்கள், இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் மற்றும் இலங்கைக்கு எதிராக கடந்த ஆண்டு அடித்த 208 ரன்கள் என்ற மூன்று முறை இரட்டை சதங்களை விளாசியுள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள், டி20யில் நான்கு சதங்கள் என பிரத்யேக சாதனைகளை தன்னகத்தே கொண்ட ரோஹித் சர்மா, இலங்கையை அடித்து துவம்சம் செய்து 264 ரன்களை குவித்து மிரட்டிய தினம் இன்று. 

2014ம் ஆண்டு இதே நாளில் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் இலங்கையின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 264 ரன்களை குவித்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ரோஹித்தின் இன்னிங்ஸ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சக வீரர்களுக்கு செம எண்டெர்டெயின்மெண்டாக அமைந்தது. இன்றுடன் ரோஹித் சர்மா அந்த மெகா இன்னிங்ஸை ஆடி நான்காண்டுகள் நிறைவடைகிறது. அதன் நினைவாக உங்களுக்காக அந்த வீடியோ:

4TH ODI: IND vs SL - Rohit Sharma 264

4TH ODI: IND vs SL - Rohit Sharma 264