நார்வே செஸ் சாம்பியன் – 3ஆவது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
நார்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பெற்ற நிலையில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா 3ஆவது இடம் பிடித்தார். அவருக்கு பரிசுத் தொகையாக ரூ.15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
உலகின் ஸ்டிராங்கஸ்ட் செஸ் போட்டியான நார்வே செஸ் தொடர் கடந்த மே 27 ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன், பிரக்ஞானந்தா, ஹிகாரு நகமுரா, ஆர் பிரக்ஞானந்தா, அலிரேசா ஃபிரோஸ்ஜா, ஃபேபியானோ கருவானா, டிங் லீரென் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் கார்ல்சன் மற்றும் ஃபேபியானோ இருவரும் விளையாடினர். சுவாரஸ்யமாக சென்ற இந்த போட்டியில் இறுதில் கார்ல்சன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலமாக 6ஆவது முறையாக நார்வே செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஃபேபியானோ கருவானா 2ஆவது இடம் பிடிக்க, பிரக்ஞானந்தா 3ஆவது இடம் பிடித்தார்.
இதே போன்று மகளிர் பிரிவில் சீனாவின் ஜூ வென்ஜூன் முதலிடம் பிடிக்க, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அன்னா முசிச்சுக் 2ஆவது இடமும், சீனாவின் லே டிங்ஜி 3ஆவது இடமும் பிடித்தனர். நார்வே செஸ் சாம்பியன் தொடரில் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.54,60,000 பரிசுத் தொகையும், 2ஆவது இடம் பிடித்த நகமுராவுக்கு ரூ.27,30,000 பரிசுத் தொகையும், 3ஆவது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவிற்கு ரூ.15,60,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
மேலும், 4ஆவது இடம் பிடித்த அலிரீஜா ஃபிரௌஸ்ஜாவிற்கு ரூ.13,26,000, ஃபேபியானோ கருவானா ரூ.11,70,000 மற்றும் டிங் லிரென் ரூ.9,36,000 என்று பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அதோடு மகளிர் பிரிவில் டைட்டில் வென்ற வென்ஜூனுக்கு ரூ.54,60,000, முஸிஜூக் ரூ.27,30,000, லீ டிங்ஜி ரூ.15,60,000, வைஷாலி ரூ.13,26,000, ஹம்பி ரூ.11,70,000 மற்றும் கிராம்லிங் ரூ.9,36,000 என்று பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.