சென்னையில் நடைபெறவுள்ள அடுத்த 6 ஐபிஎல் போட்டிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் திட்டமிட்டபடி 6 போட்டிகள் சென்னையில் நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என அரசியல் கட்சென்னையில் போராட்டங்களுக்கு இடையே கடும் பாதுகாப்பில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கி உள்ளது.

தமிழக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டாலும், ஐபிஎல் போட்டிக்கு கூடுதலாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை செயலாளர் கவுபாவை சந்தித்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் சுக்லா “தமிழக அரசு மற்றும் சென்னை போலீஸ் பாதுகாப்பை அதிகரிப்பதாக உறுதியளித்து உள்ளது. உள்துறை செயலாளரை நான் சந்தித்து பேசினார். அவர் டிஜிபியிடம் பேசினார். ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என டிஜிபியிடம் கேட்டுக்கொண்டார். எந்தஒரு அசம்பாவித சம்பவங்களும் நடக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்,” என்றார். 

இதற்கிடையே சென்னையில் திட்டமிட்டப்படி அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறும் எனவும் ராஜீவ் சுக்லா குறிப்பிட்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சென்னை மைதானத்தின் உள்பகுதியையும், வெளிப்பகுதியையும் தமிழக காவல்த்துறை கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளது. இந்நிலையில் சென்னையில் நடக்கும் 7 போட்டிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசை மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. மத்திய உள்துறை செயலர் ராஜீவ் கௌபா, தமிழக உள்துறை செயலரிடம் தொலைபேசியில் பேசுகையில்,  சென்னையில் நடைபெறக் கூடிய 7 ஐபிஎல் போட்டிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.