New Zealand Open Badminton India pairs advanced to 2nd round
நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணைகள் 2-ஆம் சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளனர்.
நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோஹன் கபூர் - குஹு கார்க் மற்றும் சிவம் சர்மா - ராம் பூர்விஷா இணை இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக ரோஹன் - குஹூ இணை இஸ்ரேலின் மிஷா - சேனியா இணையுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 11-21, 21-7, 21-10 என்ற செட் கணக்கில் மிஷா - சேனியா இணையை, ரோஹன் - குஹூ இணை வீழ்த்தியது. இதன்மூலம் இரண்டாவது சுற்றுக்கு இந்த இணை முன்னேறியது.
அதேபோன்று, சிவம் சர்மா - பூர்விஷா இணை ஆஸ்திரேலியாவின் நிக்கோலா - பிரான்சிஸ்கா இணையுடன் மோதியது. இதில், 21-19, 21-11 என்ற கணக்கில் நிக்கோலா - பிரான்சிஸ்கா இணையை, சிவம் சர்மா - பூர்விஷா இணை வீழ்த்தியது. இதன்மூலம் இந்த இணையும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஏனைய வீரர்களான அஜய் ஜெயராம், செளரப் வர்மா, சாய் பிரணீத், சமீர் வர்மா ஆகியோர் இன்று தங்கள் போட்டிகளில் கலக்குவதற்காக காத்திருக்கின்றனர்.
