வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 47 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்த வெற்றியால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் தோற்றாலும் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய வங்கதேசம் 18.1 ஓவர்களில் 148 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

54 பந்துகளுக்கு தலா 7 பவுண்டரி மற்றும் சிக்ஸர்களுடன் 101 ஓட்டங்கள் விளாசிய நியூஸிலாந்தின் காலின் மன்ரோ ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.