Hangzhou 2023: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா – 2ஆவது முறையாக ஆசிய விளையாட்டில் தங்கம் கைப்பற்றி சாதனை!
ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.88 மீ தூரம் எறிந்து தங்கம் வென்றுள்ளார்.
சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. இதில், தற்போது நடந்து முடிந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.88 மீ தூரம் வரையில் ஈட்டி எறிந்து தங்கம் கைப்பற்றினார். இதன் மூலமாக தொடர்ந்து 2ஆவது முறையாக ஆசிய விளையாட்டில் தங்கம் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, 2021 டோக்கியோ ஒலிம்பிக், 2021 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக இந்தியா 18 தங்கம், 31 வெள்ளி மற்றும் 32 வெண்கலப் பதக்கத்துடன் 81 பதக்கங்கள் கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது.
இதே போன்று 41 ஆண்டுகளுக்குப் பிறகு 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் முகமது அனாஸ் யஹியா, அமோஜ் ஜாகோப், முகமது அஜ்மல் வரியதோடி, ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர். இதன் மூலமாக 400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியா 3ஆவது தங்கம் வென்றுள்ளது.