Neela Kapoor appointed as the director of the film - Who is this blue kapur?
இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) இயக்குநராக நீலம் கபூர் நியமிக்கப்பட்டார்.
இந்திய விளையாட்டு ஆணையமான சாய்-ன் இயக்குநராக மூத்த இந்திய தகவல் பணி அதிகாரி நீலம் கபூர் நேற்று நியமிக்கப்பட்டார்.
1982-ஆம் ஆண்டு ஐஐஎஸ் பிரிவு அதிகாரியான நீலம் கபூர், முன்னதாக கள விளம்பரங்களுக்கான இயக்குநரகத்தின் முதன்மை இயக்குநராக இருந்தார். அவரது நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில், 2019 ஜூலை 31-ஆம் தேதி வரையில் அவர் அந்தப் பொறுப்பில் நீடிக்க உள்ளார்.
நீலம் கபூர் 2009-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்துபோது செய்தித்தொடர்பு அமைப்பின் முதன்மை இயக்குநராக இருந்தார்.
இந்திய தகவல் பணி அதிகாரி ஒருவர் சாய் இயக்குநராக நியமிக்கப்படுவது இது முதல் முறையாகும். இதுவரையில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளே அந்தப் பணிக்கு நியமிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
