National Wrestling Championship Gold Medal Winning Sisters
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்களது எடைப் பிரிவில் எதிராளியை வீழ்த்தி சகோதரிகளான வினேஷ் போகத் மற்றும் ரீது போகத் தங்கம் வென்றுள்ளனர்.
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் சகோதரிகளான வினேஷ் போகத், ரிது போகத் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ரயில்வே அணி சார்பில் போட்டியிட்டார் வினேஷ் போகத். இவர் 55 கிலோ எடைப் பிரிவில் அரியாணாவின் மனீஷாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்தப் போட்டியில் மனிஷாவை வீழ்த்தி வினேஷ் தங்கம் வென்றார்.
அதேபோன்று 50 கிலோ எடைப் பிரிவில் ரிது போகத், நிர்மலாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் நிர்மலாவை வீழ்த்தி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார் ரிது.
சகோதரிகள் இருவரும் தங்களது எடைப் பிரிவில் எதிராளியை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
