National Women Boxing Federation Sarita Devi and Sonia Lathar
தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சரிதா தேவி, சோனியா லேதர், பவித்ரா, ஷ்ஷி ஷோப்ரா, சர்ஜுபாலா தேவி ஆகியோர் தங்களது எடைப் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அரியாணா மாநிலம் ரோத்தக்கில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டுள்ள சரிதா தேவி, தனது அரையிறுதியில் அரியாணாவின் மோனிகாவை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று அசத்தினார்.
இதனையடுத்து இறுதிச்சுற்றில் அவர் இரயில்வே விளையாட்டு வாரிய வீராங்கனையான பவித்ராவை எதிர்கொள்கிறார்.
பவித்ரா தனது அரையிறுதியில் உத்தரகண்ட் வீராங்கனை பிரியங்கா செளதரியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, 57 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட சோனியா லேதர் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் அகில இந்திய காவல்துறை அணியின் சந்தியா ராணியை வென்றார்.
இறுதிச்சுற்றில் சோனியா லேதர், ஷஷி சோப்ராவுடன் மோதுகிறார்.
இதனிடையே, 48 கிலோ எடைப் பிரிவில் சர்ஜுபாலா தேவி தனது அரையிறுதியில் இரயில்வே விளையாட்டு வாரிய வீராங்கனை மீனாட்சியை வென்றதன்மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டார்.
