national rifel shooters Ariyana and west bengal best players ...

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியாணாவின் மானு பேகர், மேற்கு வங்கத்தின் மெஹுலி கோஷ் சிறந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிஸ்டல் பிரிவில் மானு பேகர் 11 தங்கங்கள், 3 வெள்ளிகள், ஒரு வெண்கலம் என 15 பதக்கங்கள் வென்றார்.

மெஹுலி கோஷ் ரைஃபிள் சுடுதல் பிரிவில் 8 தங்கங்கள், 3 வெண்கலங்கள் என 11 பதக்கங்கள் கைப்பற்றினார். ஒட்டுமொத்த சாம்பியனாக அரியாணா மாநிலம் தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று தனிநபர் பிரிவில் அரியாணா 10 தங்கங்கள், 3 வெள்ளிகள், 4 வெண்கலங்கள் என 17 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.

பஞ்சாப் 4 தங்கங்கள், 3 வெள்ளிகள், 4 வெண்கலங்கள் என 11 பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது.

அணிகள் பிரிவில் 24 தங்கங்கள், 21 வெள்ளிகள், 15 வெண்கலங்கள் என 60 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது அரியாணா.

பஞ்சாப் மாநிலம் 18 தங்கங்கள், 12 வெள்ளிகள், 15 வெண்கலப் பதக்கங்களுடன் 2-ஆம் இடம் பிடித்தது.

இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 3388 வீரர்களும், 1520 வீராங்கனைகளும் பங்கேற்றனர். அவர்களுடன் பாரா வீரர், வீராங்கனைகளும் பங்கேற்ற இப்போட்டியில் மொத்தம் 778 பதக்கங்கள் வழங்கப்பட்டன என்பது கொசுறு தகவல்.