National motorcycle betting ceremony takes place in July
கோவையில், ஜே.கே. டயர் நிறுவனம், சுஸுகி மோட்டார்ஸ் நிறுவனம் ஆகியவை சார்பில் சுஸுகி ஜிக்ஸர் கோப்பைக்கான தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயம் ஜூலையில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டி, 12 வயது முதல் 16 வயது வரை, 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு என இரு பிரிவுகளாக நடைபெறுகிறது.
சர்வதேச மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், ஜே.கே. டயர் நிறுவனம் சார்பில் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களுக்கான தேர்வு, தெற்கு மண்டலப் பகுதிக்கு பெங்களூரில் ஜூன் 4-ஆம் தேதி நடைபெறும்.
அதேபோன்று கிழக்கு மண்டலப் பகுதிக்கு ஐசாலில் ஜூன் 10-ஆம் தேதியும், மேற்கு மண்டலப் பகுதிக்கு புணேவில் ஜூன் 18-ஆம் தேதியும் நடைபெறும்.
வடக்கு மண்டலப் பகுதிக்கு ஜூன் 25-ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
இதனைத் தொடர்ந்து, வரும் ஜூலையில் கோவையில் தேசிய அளவிலான போட்டி நடைபெற உள்ளது.
இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் ஸ்பெயினில் நடைபெற உள்ள ரெட்புல் ரூக்கிஸ் கோப்பையில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.
இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சுஸுகி ஜிக்ஸர் பைக்கும், அனைத்துப் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும்.
தேசியப் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஜூன் 27-ஆம் தேதி வெளியிடப்படும்.
இவர்கள் கோவையில் நடைபெறும் பயிற்சி முகாமில் சேர்க்கப்படுவார்கள்.
