National level basketball Chennai IOb Chennai casts victory
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியின் முதல் மற்றும் இரண்டாவது ஆட்டங்களில் சென்னை ஐஓபி, சென்னை கஸ்டம்ஸ் அணிகள் வாகைச் சூடின.
கடந்த 21-ஆம் தேதி முதல் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில், எல்ஆர்ஜி நாயுடு கோப்பைக்கான தேசியளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
குரூப் ஏ பிரிவில் சென்னை ஐஓபி, புது தில்லி சிஆர்பிஎப், இந்தியன் நேவி, சென்னை ஐசிஎப் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளனர்.
அதேபோன்று, குரூப் பி பிரிவில் கபூர்தாலா ரயில்வே கோச் அணி, புது தில்லி ஏர்போர்ஸ், வாரணாசி டிஎல்டபிள்யூ, சென்னை கஸ்டம்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.
நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப்போட்டியின் நேற்ரு காலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சென்னை ஐஓபி அணியும், புதுதில்லி சிஆர்பிஎப் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் 61-43 என்ற கணக்கில் சென்னை ஐஓபி அணி, புதுதில்லி சிஆர்பிஎப் அணியை துவம்சம் செய்து வெற்றி வாகைச் சூடியது.
அதேபோன்று மாலையில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் சென்னை கஸ்டம்ஸ் அணியும், வாரணாசி டிஎல்டபிஸ்யூ அணியும் மோதியதில் 73-64 என்ற கணக்கில் சென்னை கஸ்டம்ஸ் அணி வென்றது.
