National car race Gaurav kil won the champion again

தேசிய கார் பந்தயத்தில் நடப்புச் சாம்பியனான கெளரவ் கில் மீண்டும் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

மெட்ராஸ் மோட்டார் விளையாட்டு சங்கம், இந்திய மோட்டார் விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 40-வது தேசிய கார் பந்தயம் கடந்த 2 நாள்களாக நடைபெற்றது.

சென்னை அடுத்த திருபெரும்புதூரில் எம்எம்ஆர்டி கார் பந்தய மைதானத்தில் நடைப்பெற்ற இந்த கார் பந்தயத்தில் நாடு முழுவதும் இருந்து முன்னணி வீரர்களைக் கொண்ட 31 குழக்கள் பங்கேற்றன. 

அதன்படி, மஹிந்திரா அணி சார்பில் பங்கேற்ற நடப்புச் சாம்பியன கெளரவ் கில் பந்தய தூரத்தை 44 நிமிடம் 35 நொடிகளில் கடந்தார். 

அணிகள் பிரிவில் கில் - மூசா இணை பந்தய தூரத்தை 1 மணி நேரம், 28:43. 1 நிமிடங்களில் கடந்தது. 

அமித்ரஜித் கோஷ் - அஸ்வின் நாயக் இணை இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

ஐஎன்ஆர்சி 2-இல் கர்ணகடூர், நிகில் வி பாய் இணை முதலிடத்தைப் பெற்றது. 

ஐஎன்ஆர்சி 3-இல் விக்ரம் ராவ் - சோமையா இணை முதலிடத்தைப் பெற்றது.

40-வது தேசிய கார் பந்தயத்தில் நடப்புச் சாம்பியன் கெளரவ் கில் மீண்டும் முதலிடம் பெற்ற நிகழ்வு இந்த போட்டியில் பெரும் உற்சாகத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.