National Boxing Manoj Kumar won gold Siva Thaaba won bronze
தேசிய குத்துச் சண்டை போட்டியில் மனோஜ் குமார் தங்கமும், சிவா தாபா வெள்ளியும் வென்றனர்.
தேசிய குத்துச் சண்டை போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் 69 கிலோ எடைப் பிரிவின் இறுதிச் சுற்றில் மனோஜ் குமார் மற்றும் சர்வீசஸ் வீரர் துரியோதன் சிங் மோதினர்.
இதில், 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் துரியோதன் சிங்கை வீழ்த்தினார் மனோஜ் குமார். இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் வென்று தங்கம் வென்று அசத்தியுள்ளார் மனோஜ் குமார்.
அதேபோன்று, 60 கிலோ எடைப் பிரிவின் இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான சிவ தாபா மற்றும் சர்வீசஸ் வீரர் மணீஷ் கெஷிக் மோதினர்.
இதில், மணீஷ் கெஷிக்கிடம் தோல்வி கண்டதால் சிவ தாபா வெள்ளிப் பதக்கம் வென்றார்,
