nasser hussain unusual commentary faced fans criticize

போட்டியின்போது மைதானத்தில் ஃபீல்டர்களுடன் நின்று நாசர் ஹூசைன் வர்ணனை செய்தது, ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கரீபியன் தீவுகளில் கடந்த ஆண்டு கடும் சூறாவளி வீசியது. இதில் சேதமடைந்த வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களை சீரமைக்க நிதி திரட்டுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உலக லெவன் அணிகளுக்கு இடையே டி20 போட்டி நடைபெற்றது. 

இந்த போட்டியில் உலக லெவன் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, வர்ணனையாளரான நாசர் ஹூசைன் மைதானத்திற்குள் வந்து ஃபீல்டர்களுடன் நின்று வர்ணனை செய்தார்.

விக்கெட் கீப்பருக்கு அருகில், முதல் ஸ்லிப்பில் நின்று வர்ணனை செய்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாசர் ஹூசைனின் இந்த அதிகபிரசிங்கி தனமான இந்த நடவடிக்கையை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சர்வதேச போட்டிகளில் இப்படி நடந்துகொள்ளலாமா? இது என்ன கேலிக்கூத்து? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.