காயம் காரணமாக இந்த சீசனுக்கான டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியுள்ள ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், டிசம்பரில் நடைபெறவுள்ள முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் ரீ-என்ட்ரீ கொடுக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், "அபுதாபியில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதன் மூலம், மீண்டும் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்குகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சீசனில், காயம் காரணமாக தடுமாறி வந்த நடால், அடுத்த ஆண்டு போட்டிகளுக்கு தயாராவதற்காக, நடப்பு சீசனுக்கான போட்டிகளில் இருந்து கடந்த அக்டோபரில் வெளியேறினார்.
டிசம்பர் 29 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் முபாதலா டென்னிஸ் போட்டியில், உலகின் முதல் நிலை வீரர் ஆன்டி முர்ரே, மிலோஸ் ரயோனிச், ஜோ வில்ஃப்ரைடு சோங்கா, டேவிட் காஃபின், தாமஸ் பெர்டிச் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
