இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் இருந்து முரளி விஜய் மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார்.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியிலிருந்து தொடக்க வீரர் முரளி விஜய் விலகியுள்ளார்.

முரளி விஜய்-க்குப் பதிலாக ஷிகர் தவன் ஆடுவார்.

இந்த விலகல் தொடர்பாக பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் செளத்ரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போது முரளி விஜய்க்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் முழுமையாக மீளவில்லை.

இதையடுத்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டு உள்ளது. அவருக்குப் பதிலாக தவன் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவில் தொடங்குகிறது என்பது கொசுறு தகவல்.