எட்டு அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் மும்பையில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சியும், நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.யும் (கவுகாத்தி) சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.
>
>
>
> பிற்பாதியில் 55-வது நிமிடத்தில் மும்பை அணி வீரர் பிரனாய் ஹால்டெரை, கோல் பகுதியில் வைத்து எதிரணி வீரர் காலை இடறி விட்டதால், மும்பை அணி ‘பெனால்டி’ அதிர்ஷ்டத்தை பெற்றது. பெனால்டி வாய்ப்பை மும்பையின் நம்பிக்கை வீரர் டியாகோ பார்லன் (உருகுவே) எளிதில் கோலாக்கினார்.
>
>
>
> அதன் பிறகு கோல் எதுவும் விழவில்லை. கவுகாத்தி அணி இலக்கை நோக்கி 6 ஷாட்டுகளை அடித்த போதிலும் ஒன்றை கூட கோலாக மாற்ற முடியவில்லை. முடிவில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. மும்பை அணி ஏற்கனவே 1-0 என்ற கோல் கணக்கில் புனேயை தோற்கடித்து இருந்தது.
>
>
>
> அதே சமயம் தொடர்ந்து 2 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த கவுகாத்தி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.
>
>
>
> இன்று இரவு 7 மணிக்கு படோர்டாவில் நடைபெறும் ஆட்டத்தில் எப்.சி.கோவா-புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred